/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருணாநிதி இருந்திருந்தால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும் விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு
/
கருணாநிதி இருந்திருந்தால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும் விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு
கருணாநிதி இருந்திருந்தால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும் விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு
கருணாநிதி இருந்திருந்தால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும் விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு
ADDED : ஜூன் 25, 2024 07:12 AM

விக்கிரவாண்டி : தமிழகத்தின் சமூக நீதி காத்திட ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திட விக்கிரவாண்டி வாக்காளர்கள் கையில் தான் உள்ளது என அன்புமணி பேசினார்.
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து மாநிலத் தலைவர் அன்புமணி பேசியதாவது:
தமிழக மக்கள் சமூகநிதி பெற பா.ம.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் குடும்பமும், அவரும் முன்னேறுவர். பா.ம.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் ஜாதிவாரி கணக்கெடு நடைபெறும்.
சமூக நீதிக்கும் இன்றைய தி.மு.க.,விற்கும் சம்மந்தம் இல்லை. கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது என தெரியவில்லை. 10.5 சதவீதம் கொடுக்க முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என கூறுகிறார். கருணாநிதி இருந்திருந்தால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் 90 சதவீதம் பேர். இந்த சாவுகளுக்கு 2 எம்.எல்.ஏ.,க்கள்தான் காரணம் என பள்ளி மாணவர்கள் கூட கூறுகின்றனர். கள்ளச்சாராய சாவு குறித்து சி.பி.ஐ., விசாரிக்கவேண்டும்.
அ.தி.மு.க.,வினருக்கு வேண்டுகோள். உங்களுக்கு எதிரி நாங்கள் அல்ல. தி.மு.க., தான் எதிரி. தி.மு.க.,வை ஒழிக்க எம்.ஜி.ஆர்., விரும்பினார். அ.தி.மு.க., கட்சியின் முடிவின்படி இந்த தேர்தலில் நிற்கவில்லை. அதனால், நீங்கள் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பா.ம.க.,விற்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.
கவுரவதலைவர் மணி, வழக்கறிஞர் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ, பா.ஜ.,மாவட்ட தலைவர் கலிவரதன், த.மா.கா., மாவட்ட தலைவர் தசரதன், பா.ம.க., மாவட்ட தலைவர் தங்கஜோதி, அமைப்பு செயலாளர்கள் பழனிவேலு, மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.