ADDED : மார் 07, 2025 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலங்கம்பட்டு அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
விழா, கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கடந்த 4ம் தேதி மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. தொடர்ந்து ஏரிக்கரை அரசமரத்திலிருந்து சக்தி கரக ஊர்வலம் நடந்தது.
நேற்று முன்தினம் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.