/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : மே 03, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பம் அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணி முதல் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து 108 மூலிகை ஹோமபூஜையும், யாகமும் நடந்தது. 9:00 மணியளவில் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடாகி கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை தீபாராதனையும், சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.