ADDED : பிப் 22, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டயில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட தென்மேற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விக்கிரவாண்டி, பனையபுரம், ராதாபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை தாங்கி, அஞ்சலையம்மாள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் விஜய்தீப், செயற்குழு உறுப்பினர்கள் குமரன், குமுதவள்ளி, பிரித்தீவிராஜ், சாமி மலை, மணி பாலச்சந்தர், இளைஞரணி அமைப்பாளர் பிரதிவிராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மனோரஞ்சிதம், ஒன்றிய நிர்வாகிகள் சேகர், பாரதி, மணி ராஜன், ஜான்பீட்டர், முத்து, சிவா பங்கேற்றனர்.