நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சென்னகுணம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 15வது தமிழ்க்கூடல் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
பனமலைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமை தாங்கினார். ஆசிரியர் அந்தோணிராஜ் வரவேற்றார். ஆசிரியர் சவரியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். ஊராட்சி தலைவர் ராமேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மகாலிங்கம், ஊராட்சி துணைத் தலைவர் சித்தார்த்தன், ஒன்றிய கவுன்சிலர் சிவா முன்னிலை வகித்தனர்.
விழாவில், பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நுாலரங்கம் நடந்தது. புதுச்சேரி மத்திய கலால் துறை உதவி ஆணையர் சண்முக சுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.