ADDED : ஏப் 28, 2024 05:36 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.
இ.எஸ்., கல்விக் குழுமத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் முரளிதரன், துணை முதல்வர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் 'டிவி' தொகுப்பாளர் விக்கி மற்றும் டவுட் செந்தில் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
