ADDED : ஜூலை 26, 2026 06:05 PM
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வி.பாளையம் சரஸ்வதி சி.பி.எஸ்.இ., சென்ட்ரல் பள்ளியில் ‘மஹாஉத்சவ் 26’ ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். தாளாளர் முத்து சரவணன் வரவேற்றார். பள்ளி தலைவர் ரவீந்திரன், பொருளாளர் சிதம்பரநாதன், சரஸ்வதி மெட்ரிக் பள்ளி முதல்வர் யமுனாராணி, சரஸ்வதி எக்செல் பள்ளி முதல்வர் இந்துமதி, எக்செல் பள்ளி நிர்வாக அதிகாரி முத்து சிவஞானம் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுபஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்தார்.
பெங்களூரு இஸ்ரோ அமைப்பின் சர்வதேச மற்றும் முகமைகளிடை ஒத்துழைப்பு அலுவலக இயக்குநர் கவுரிசங்கர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், பள்ளியின் சிறப்பு ஆண்டு மலரான வாய்ஸ் ஆப் எஸ்.சி.எஸ்., வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறந்த மாணவர் விருதும், முழு வருகைப்பதிவு மாணவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நிலக்கிழார் அண்ணாமலை, அறங்காவலர் குழுத்தலைவர் சிவக்குமார், வழக்கறிஞர் கமருதீன், பிரேம்நாத், முஹம்மது இக்பால் சேட், அப்பு, பாலகுரு, முத்து மற்றும் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சரவணன், சிங்கப்பெண் அதிரடிப்படை சற்குணம் உட்பட பலர் பங்கேற்றனர்.
