/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆண்பாக்கம் - கொடூர் சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
ஆண்பாக்கம் - கொடூர் சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஆண்பாக்கம் - கொடூர் சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஆண்பாக்கம் - கொடூர் சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : மே 03, 2024 11:59 PM

வானுார் : ஆண்பாக்கத்தில் இருந்து கொடூர் செல்லும் சாலை படுமோசமாக மாறியுள்ளதால் 3 கிராம வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் தொகுதிக்குட்பட்ட ஆண்பாக்கம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தினமும் கொடூர் வழியாக கீழ்புத்துப்பட்டு, கனகசெட்டிக்குளம், காலாப்பட்டு, அனுமந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
கிளியனுார், தைலாபுரம் போன்ற பகுதி மக்களும் ஆண்பாக்கம், கொடூர் வழியாக கீழ்புத்துப்பட்டு, அனுமந்தை, காலாப்பட்டு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி, கல் லுாரி மாணவர்களும் அதிகளவில் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். தினந்தோறும் இந்த சாலை வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், ஆண்பாக்கத்தில் இருந்து கொடூர் வரை 3 கி.மீ., தொலைவிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது.
தற்போது இந்த பிரதான சாலை படுமோசமாக மாறியுள்ளது. ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து, மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் போது, அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகி விடும் நிலையும் இருந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் இந்த சாலை வழியாக செல்லாமல், 10 கி.மீ., துாரம் மெயின் ரோடு வழியாக சுற்றி கொண்டு செல்கின்றனர்.
மூன்று கிராம மக்கள் பயன்படுத்தும் இந்த சாலையை புதுப்பிக்கக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை அந்த சாலையை போடுவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 3 கி.மீ., பழுதாகியுள்ள சாலையை சீரமைத்து தார் சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.