/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளச்சாராய தடுப்பு ஆய்வுக் கூட்டம்
/
கள்ளச்சாராய தடுப்பு ஆய்வுக் கூட்டம்
ADDED : ஜூன் 25, 2024 06:59 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில், கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பழனி பேசியதாவது:
மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 12 டி.எல்., உரிமங்களை ஆய்வு செய்ய வேண்டும். மாதம் தோறும் நடைமுறை சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தில் கள்ளச்சாராயம், போதை பொருள் தடுப்பு குறித்து போலீசாருக்கு விவாதிக்க வேண்டும். வாரம் தோறும் கலால் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து வருவாய், காவல், சுகாதாரம், உள்ளாட்சி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களை கொண்டு ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.
வருவாய்த் துறை அலுவலர்கள் சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக ரகசிய தகவல்களை அளிக்க வேண்டும்.
கிராமங்களில் வருவாய், காவல், சுகாதாரம், உள்ளாட்சித் துறை மகளிர் சுயஉதவிக்குழு, ரேஷன் கடை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணியிலிருக்க வேண்டும். புதுச்சேரி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம், போதைப் பொருளை தொடர்ந்து விற்பனை செய்யும் குற்றவாளிகள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருள்கள் தொடர்பான புகார் அளிக்க அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள டோல்ப்ரீ எண் 10581, வாட்ஸ் அப் எண் 9498410581 பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றார்.
எஸ்.பி., தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.