/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உபதேசியார்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
/
உபதேசியார்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
உபதேசியார்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
உபதேசியார்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 25, 2024 11:11 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நலவாரியத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்ல பணியாளர்களின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்ப படிவத்தை விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெறலாம்.
பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை விழுப்புரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள், ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் ஆகிய அங்கீகாரம் செய்த திருச்சபைகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்பிக்க வேண்டும். இந்த திருச்சபைகளின் பரிந்துரையின் பேரில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்த வாரியத்தில் பதியும் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஏனைய அமைப்புசாரா வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.