/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறால் பண்ணை பதிவுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
/
இறால் பண்ணை பதிவுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஆக 12, 2024 06:18 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், இறால் பண்ணை பதிவதற்கான விண்ணப்பங்களை உரிமையாளர்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளை இறால் பண்ணைகளை பதிவு செய்ய கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையில் அனைத்து நன்னீர், உள்நாட்டு இறால் பண்ணைகளையும் பதிவு செய்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் வெனாமி (வெள்ளை) இறால் வளர்க்கும் பண்ணை உரிமையாளர்கள் தங்களது பண்ணைகளை பதிய விழுப்புரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

