ADDED : மார் 25, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த களையூர் நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி சேர்மன் பாபு தலைமை தாங்கினார். செயலாளர் அய்யப்பன் வரவேற்றார். பொருளாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் வாழ்த்திப் பேசினார். துணை முதல்வர் ராஜேந்திரன், ஐ.டி.ஐ. முதல்வர் அருண்குமார், துறைத் தலைவர்கள் மாணிக்கவேலு, அசோக்குமார், சங்கிலீஸ்வரன், சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வெண்சூர் விஷுவல்ஸ், ராயல் என்பீல்டு, டி.வி.எஸ்., அசோக் லேலண்ட், வால்வோ, லியோ உள்ளிட்ட நிறுவனங்களில் பணி புரிய 250 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

