/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சந்திரயான் திட்ட இயக்குனருக்கு இன்று பாராட்டு விழா
/
சந்திரயான் திட்ட இயக்குனருக்கு இன்று பாராட்டு விழா
சந்திரயான் திட்ட இயக்குனருக்கு இன்று பாராட்டு விழா
சந்திரயான் திட்ட இயக்குனருக்கு இன்று பாராட்டு விழா
ADDED : ஜூன் 15, 2024 06:20 AM
விழுப்புரம்: விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் சந்திராயன் திட்ட இயக்குனருக்கு பாராட்டு விழா நடக்கிறது.
ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியின் 41வது ஆண்டு விழாவையொட்டி, முன்னாள் மாணவரான சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு, இன்று பாராட்டு விழா நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு, இ.எஸ். லார்ட்ஸ் பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் மாணவர்களுடனும் கலந்துரையாடுகிறார். 11:00 மணிக்கு இ.எஸ்., கல்வி குழுமம் சார்பில் வீரமுத்துவேலின் விண்வெளி உலக சாதனையை பாராட்டி விழா நடக்கிறது.
விழாவிற்கு, இ.எஸ்., கல்வி குழும நிறுவனர் சாமிக்கண்ணு தலைமை தாங்குகிறார்.
தலைவர் செல்வமணி முன்னிலை வகிக்கிறார். வீரமுத்துவேல் சிறப்புரையாற்றுகிறார்.
தொடர்ந்து, கல்லுாரி சார்பில் ஏற்படுத்திய புதிய மின்சாரத்தில் இயங்கும் காரின் இயக்கத்தையும் மற்றும் மின்சார வாகன உற்பத்தி ஆராய்ச்சி படிப்பு வளாகத்தையும் துவக்கி வைக்கிறார்.
பின், முன்னாள் மாணவர்கள் சார்பில் அமைக்க உள்ள முன்னாள் மாணவர் வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இத்தகவலை கல்லுாரி தலைவர் செல்வமணி தெரிவித்துள்ளார்.