/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா
/
அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா
அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா
அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மார் 15, 2025 06:57 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் காவலர்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். பாதுகாப்பு மேலாளர் ஜெகதீஷ் வரவேற்றார்.
கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி பாதுகாவலர்களுக்கு அவசர தொடர்பிற்காக வாக்கி டாக்கி வழங்கியும், துாய்மைப் பணியாளர்கள், காவலர்கள் பணிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கி பேசினார்.
கல்லுாரி துணை முதல்வர் தாரணி, ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், பேராசிரியர்கள் அருண்பிரசாத், பரமேஸ்வரி, ஆனந்தி, சங்கீதா, வாசுகி , பாதுகாப்பு மேற்பார்வையாளர் சுதந்திர ராமன் உட்பட அனைத்து துறை பேராசிரியர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் காவலர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
பாதுகாப்பு மேற்பார்வையாளர் தீனன் நன்றி கூறினார்.