/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அறுபடை வீடு ஆன்மிக பயணம்: ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
/
அறுபடை வீடு ஆன்மிக பயணம்: ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
அறுபடை வீடு ஆன்மிக பயணம்: ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
அறுபடை வீடு ஆன்மிக பயணம்: ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 02, 2025 06:38 AM
விழுப்புரத்தில் இருந்து வரும் 4ம் தேதி, அறுபடை வீடு இலவச ஆன்மிக பயண குழு புறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம் செய்திக்குறிப்பு:
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, திருத்தணி, சுவாமி மலை, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் இலவச ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன்படி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் 100 பேர் அடங்கிய குழுவினர், வரும் 4ம் தேதி பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள், விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து அன்று காலை அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் www.hrce.tn.gov.in என்ற தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, பயண தேதி விபரங்கள் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-நமது நிருபர் -

