/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிசியோதெரபி மருத்துவர் மீது தாக்குதல்
/
பிசியோதெரபி மருத்துவர் மீது தாக்குதல்
ADDED : மே 04, 2024 06:58 AM
விழுப்புரம் : பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக பிசியோதெரபி மருத்துவரை தாக்கப்பட்ட சம்பவம் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் பூந்தோட்டம் பாதையில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு, நேற்று மாலை 21 வயது பெண் ஒருவர், பிசியோதெரபி சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பிசியோதெரபி உதவி மருத்துவர், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து, அந்த பெண் உறவினர்களிடம் தகவல் தெரிவித்ததால், கிராமத்திலிருந்து வந்த உறவினர்கள், உதவி மருத்துவரை கடுமையாக தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, அந்த பெண் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலிசார் விசாரித்து வருகின்றனர்.