ADDED : செப் 27, 2026 07:23 PM
விழுப்புரம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட கவுன்சில் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். துணைத் தலைவர்கள் சண்முகம், சத்தியமூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொ.மு.ச., தலைவர் ஞானசேகரன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்கம் பொதுச் செயலாளர் வாலிபால் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இணை பொதுச் செயலாளர் பாரி, செயற்குழு உறுப்பினர் கதிர்வேல் கண்டன உரையாற்றினர்.
தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மின்சார சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பெயரால் தனியாருக்கு மாநில அரசு தாரை வார்க்கக் கூடாது. 200 மாணவர் விடுதிகளை தனியாரிடம் விடுவதை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பேசினர்.
பொருளாளர் காமராசன் நன்றி கூறினார்.
