நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: கொணமங்கலம் சிருஷ்டி பவுண்டேஷன் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உலக ஆஸ்துமா தினம் விழா நடந்தது.
சிருஷ்டி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் பேசுகையில், ஆஸ்துமா நோய் நுரையீரலில் பாதிக்கக்கூடிய ஒன்றாகும், இது ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை உட்கொண்டால் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம், என்றார்.
இதில் சிருஷ்டி நிர்வாகி கணேசன், செயலாளர் லட்சுமி கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.