/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில் கிராம செயல் வழிக்குழு விளையாட்டு நிறுவன நிர்வாக கூட்டம்
/
ஆரோவில் கிராம செயல் வழிக்குழு விளையாட்டு நிறுவன நிர்வாக கூட்டம்
ஆரோவில் கிராம செயல் வழிக்குழு விளையாட்டு நிறுவன நிர்வாக கூட்டம்
ஆரோவில் கிராம செயல் வழிக்குழு விளையாட்டு நிறுவன நிர்வாக கூட்டம்
ADDED : ஜூன் 23, 2024 05:54 AM

வானுார்: ஆரோவில்லில் கிராம செயல்வழிக்குழு, விளையாட்டு மற்றும் கலை மேம்பாட்டிற்காக உருவாக்கிய (ஏ.பி.எஸ்.சி.ஏ.,) விளையாட்டு நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் செயலாளர் ஜெரால்டு மோரீஸ், வரவேற்று காலாண்டு திட்டங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் நிறுவனத்தின் நிர்வாககுழு கூட்டம் மாதம் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவது.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளுக்கான மாரத்தான் ஓட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது.
செப்டம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடத்துவது. மாநில அளவில் நடக்கும் மூத்தோருக்கான தடகளப் போட்டி நடத்துவது. வானுார் தாலுகா சார்பாக ஏ,பி.எஸ்.சி.ஏ., கைப்பந்து அணியை உருவாக்கி, தேவையான பயிற்சி அளித்து விழுப்புரம் மாவட்ட அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வைப்பது என்பது உட்படபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உதவி செயலாளர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.