ADDED : செப் 18, 2024 03:55 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம் : கடன் தொல்லை தாங்காமல், ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் கிடங்கல்(1) பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சுரேஷ், 49; ஆட்டோ டிரைவர். கடன் தொல்லையால் அவதிப்பட்ட இவர், நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
