ADDED : மே 13, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோ திருட்டுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் திருச்சி சாலை தனலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜா, 56; இவருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி, விழுப்புரம் நகரில் வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி இரவு, தனலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டு முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு, வீட்டில் துாங்கினார். மீண்டும் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, ஆட்டோவை மர்ம நபர்கள் திருட்டிச்சென்றது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, திருட்டுபோன ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆட்டோவை தேடி வருகின்றனர்.
