நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செஞ்சி காவல் துறை சார்பில் நடந்த முகாமிற்கு, தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.
இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, அப்பாண்டை ராஜன் ஆகியோர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் குறித்து விளக்கினர்.
சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மணி, குமரவேல் மற்றும் ஆசிரியர்கள், போலீ சார், மாணவர்கள் பங்கேற்றனர்.