
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: அனந்தபுரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த முகாமிற்கு, தாளாளர் சேகர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சுஜாதா சேகர் முன்னிலை வகித்தார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் தவமணி, தமிழ்ச்செல்வன் மற்றும் தலைமைக் காவலர் கொளஞ்சியம்மாள் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முகாமில், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

