/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதையில் இருந்து இளைஞர்கள் விடுபட விழிப்புணர்வு தொடர் ஓட்டம்
/
போதையில் இருந்து இளைஞர்கள் விடுபட விழிப்புணர்வு தொடர் ஓட்டம்
போதையில் இருந்து இளைஞர்கள் விடுபட விழிப்புணர்வு தொடர் ஓட்டம்
போதையில் இருந்து இளைஞர்கள் விடுபட விழிப்புணர்வு தொடர் ஓட்டம்
ADDED : மே 24, 2024 05:44 AM

விழுப்புரம்: போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விடுபட விழிப்புணர்வு தொடர் ஓட்டம் மேற்கொண்ட தடகள வீரர் விழுப்புரத்தில் நிறைவு செய்தார்.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தடகள வீரர் ரனில்நாத், 25; இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், போதைப் பழக்கத்தில் இருந்து, இளைஞர்கள் விடபட விழிப்புணர்வு தொடர் ஓட்டம் மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு செங்கல்பட்டு டோல்கேட் பகுதியில் ஓட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து, சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் மதுராந்தகம், மேல்மருவத்துார், ஓங்கூர், திண்டிவனம் வழியாக ஓடி வந்த அவர், இரவு 7:30 மணிக்கு விழுப்புரத்தில் தனது தொடர் ஓட்டத்தை நிறைவு செய்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாயில் பகுதிக்கு வருகை தந்த ரனில்நாத்தை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி தலைமையில், விளையாட்டு வீரர்கள் வரவேற்றனர்.
அப்போது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட வலியுறுத்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் ரனில்நாத் வழங்கினார்.
அதில், வலிமையான இளைஞர்களே, நமது தேசத்தின் வலிமையான தோள்களாக இருக்க முடியும். இதனால் இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
போதைப் பழக்கம் வீட்டிற்கும், நாட்டிற்கும் உடல் நலத்திற்கும் கேடு, போதைப் பழக்கம் மனிதனை அடிமைப்படுத்தும், அவர்களின் குடும்பத்தையும் வீணாக்கி விடும். போதைப் பழக்கம் இறுதியில் உயிரையும் பறித்துவிடும்.
வாழ்வின் மேம்பாட்டை தடுக்கும் இத்தகைய கொடுமையான போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என துண்டு பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.