ADDED : ஜூன் 24, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : சர்வதேச யோகா தினத்தையொட்டி, வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் உலக யோகா தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை தி.மு.க., நகர செயலாளர் ஜீவா, வழக்கறிஞர் சுரேஷ், அக்னி குழும நிறுவனர் சுப்ரமணியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பிரம்மாகுமாரிகள் இயக்க நிர்வாகிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை தியான சொற்பொழிவு, ராஜயோக தியான பயிற்சி கற்றுத்தரப்பட்டது.