/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மகளிர் குழுவினர் விழிப்புணர்வு ஊர்வலம்

ADDED : மார் 25, 2024 05:24 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, மகளிர் சுய உதவிக்குழுவினரின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாநில ஊரக, நகர்ப் புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நடந்த ஊர்வலத்திற்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பழனி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில், மகளிர் குழுவினர், ஓட்டளிப்பது தொடர்பாகன விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, 100 சதவீதம் ஓட்டளிப்பது குறித்து உறுதிமொழியேற்றனர்.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பார்கவி, தேர்தல் தாசில்தார் ஜெயலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.