/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்
/
பி.டி.ஓ., அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 31, 2024 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 'பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சமூக நலத்துறை சார்பில், நடந்த கூட்டத்திற்கு, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட மகளிர் அதிகார மைய ஒருங்கிணைப்பாளர், விரிவாக்க அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.