/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உலக போதை ஒழிப்பு தினத்தில் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு
/
உலக போதை ஒழிப்பு தினத்தில் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு
உலக போதை ஒழிப்பு தினத்தில் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு
உலக போதை ஒழிப்பு தினத்தில் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 26, 2024 11:09 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில், காவல்துறை சார்பில், எஸ்.பி., உத்தரவின் பேரில், உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருட்களுக்கு எதிராக பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் அரசு பள்ளிகளில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், உலக போதை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்றனர்.
விழுப்புரம், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், அந்தந்த பகுதி காவல்துறையினர் சார்பில், உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.