/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
புதிய சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
புதிய சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
புதிய சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 22, 2024 01:32 AM

வானுார், : வானுார் அடுத்த குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியில், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய மூன்று புதிய சட்டங்கள் கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டங்கள் குறித்து பொது மக்கள், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, எஸ்.பி., அறிவுறுத்தலின் பேரில், கோட்டக்குப்பம் உட்கோட்ட டி.எஸ்.பி., சுனில் மேற்பார்வையில், ஆரோவில் காவல் நிலையம் சார்பில், குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் குணசீலன் தலைமை தாங்கினார். முதல்வர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துக்குமார் ஆகியோர் புதிய சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வீரராகு, ரமேஷ் செய்திருந்தனர்.