/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாணக்யா பள்ளியில் பக்ரீத் கொண்டாட்டம்
/
சாணக்யா பள்ளியில் பக்ரீத் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 15, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பக்ரீத் கொண்டாட்டம் நடந்தது.
அதனையொட்டி, பள்ளியில் நடந்த விழாவிற்கு, சாணக்யா கல்வி குழும தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார்.
பள்ளியின் துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு பேனா மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
ஆசிரியை ஷாலினி நன்றி கூறினார்.