/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்து மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்
/
முத்து மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்
ADDED : ஆக 17, 2024 02:59 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு முத்து மாரியம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
இதையொட்டி, 108 பால் குடங்களுடன் பக்தர்கள் சக்தி கரகம் ஜோடித்து குளக்கரையிலிருந்து புறப்பட்டு, மாணவ, மாணவிகள் சிலம்பாட்டம், கயிறு ஏறுதல், மல்லர் கம்பம் விளையாட்டுகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்.
முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கும்.துர்க்கையம்மனுக்கும் பக்தர்கள் பால் அபிேஷகம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு பால் தயிர், தேன், சந்தனம், பன்னீர் ,இளநீர் உள்ளிட்ட வாசனை திரவிய ங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை செய்தனர்.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

