/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
12 டன் விதைகள் விற்க தடை: சிறப்பு ஆய்வுக்குழு அதிரடி
/
12 டன் விதைகள் விற்க தடை: சிறப்பு ஆய்வுக்குழு அதிரடி
12 டன் விதைகள் விற்க தடை: சிறப்பு ஆய்வுக்குழு அதிரடி
12 டன் விதைகள் விற்க தடை: சிறப்பு ஆய்வுக்குழு அதிரடி
ADDED : மார் 08, 2025 05:26 AM
விழுப்புரம் : தனியார் விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 8.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 டன் விதைகள் விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்தனர்.
விவசாயிகளுக்கு தரமான காய்கறி, பழ பயிர்களின் விதைகள் மற்றும் இதர பயிர்களின் விதைகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுதும் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை விதை ஆய்வு துணை இயக்குனர் ரவி தலைமையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காட்டாங்குளத்துாரைச் சேர்ந்த விதை ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, வேளாண் விரிவாக்க மையங்கள், அரசு விதை சுத்திகரிப்பு நிலையம், அரசு விதைப்பண்ணை மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் என 45 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் இருந்த விதை குவியல்களில் இருந்து நெல், வீரிய மக்காச்சோளம், வீரிய கம்பு, உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி விதை மாதிரிகள் என மொத்தம் 33 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் தரம் உறுதி செய்வதற்காக விழுப்புரம் மற்றும் கடலுாரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதைக் குவியல்களின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள், தனியார் விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதை பகுப்பாய்வு முடிவறிக்கைகள், இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை ரசீது ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் 16 விதைக் குவியல்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால், 8 லட்சத்து 8 ஆயிரத்து 335 ரூபாய் மதிப்பிலான 12 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.