/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் திருவிழா நடத்த விதித்த தடை 7 ஆண்டிற்கு பின் நீக்கம்
/
கோவில் திருவிழா நடத்த விதித்த தடை 7 ஆண்டிற்கு பின் நீக்கம்
கோவில் திருவிழா நடத்த விதித்த தடை 7 ஆண்டிற்கு பின் நீக்கம்
கோவில் திருவிழா நடத்த விதித்த தடை 7 ஆண்டிற்கு பின் நீக்கம்
ADDED : ஆக 04, 2024 04:20 AM
மரக்காணம்: மரக்காணம் அருகே கோவில் திருவிழா நடத்த விதிக்கப்பட்ட தடை, 7 ஆண்டிற்கு பின் நீக்கப்பட்டதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்துவது வழக்கம்.
இவ்விழா நடத்துவது தொடர்பாக 7 ஆண்டிற்கு முன் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இரு தரப்பினரும் சமாதானம் ஆகும் வரை கோவில் திருவிழாவை நடத்த வருவாய் துறையினர் தடை விதித்தனர்.
இதனால், கடந்த 7 ஆண்டாக திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த லோக்சபா தேர்தலின் போது ஒரு தரப்பினர் கோவில் திருவிழா நடத்தாதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். உடன் அதிகாரிகள், தேர்தலுக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று ஓட்டு போட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாபு முன்னிலையில் இரு தரப்பு முக்கியஸ்தர்களுடன் சமரச கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா வழக்கம் போல் நடத்தலாம். ஆனால் 5ம் நாள் விழாவின்போது ஒரு தரப்பினர் பகுதிக்கு சாமி ஊர்வலம் செல்லும்போது, பொதுவான இடத்தில் நிறுத்தி அப்பகுதி மக்கள் பூஜை செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதனை இரு தரப்பினரும் ஏற்று கொண்டதால், விழா நடத்த விதிக்கப்பட்ட தடையை வருவாய் துறையினர் நீக்கினர். இதனால் இருதரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.