/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்
/
மேல்மலையனுார் அங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்
ADDED : ஆக 08, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அங்காளம்மனுக்கு 3 லட்சத்து ஓராயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. அதனையொட்டி, அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் 3 லட்சத்து ஒராயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.