/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெயர் பலகையில் பைக் மோதல்; டாஸ்மாக் பணியாளர் பலி
/
பெயர் பலகையில் பைக் மோதல்; டாஸ்மாக் பணியாளர் பலி
ADDED : ஏப் 27, 2024 12:14 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையோரத்திலிருந்த பெயர் பலகை மீது பைக் மோதிய விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் பலத்த அடிபட்டு இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கோரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 49; இவர் தெள்ளார் அருகே உள்ள ஊத்துக்குளம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திண்டிவனம் கிடங்கல்(1)பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி இரவு 10.30 மணியளவில் சிவக்குமார், பணியை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்திலுள்ள சாலையோரமிருந்த பெயர்பலகையின் மீது சிவக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிபட்ட அவரை, தீவிர சிகிச்சைக்காக சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.விபத்து குறித்து ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

