நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் பைக் திருட்டுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் ரஹமத் டைமண்ட் சிட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில், 45; நகை தொழிலாளி. இவர், கடந்த பிப்.27ம் தேதி காலை, விழுப்புரம் ரயில் நிலைய வெளி வளாக பகுதியில், தனது பைக்கை நிறுத்திவிட்டு, புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாலை வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.