/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்குகள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
/
பைக்குகள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
ADDED : ஜூன் 25, 2024 07:15 AM

திண்டிவனம் : இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
திண்டிவனம் அடுத்த வைரபுரத்தை சேர்ந்தவர் காளி மகன் சிம்பு,21; பி.எஸ்சி., பட்டதாரியான இவர் நேற்றிரவு 8.15 மணிக்கு வைரபுரத்தை சேர்ந்த நண்பர்கள் கைலாஷ்,20; சுகுமாறன்,17; ஆகியோருடன் பைக்கில் திண்டிவனத்தில் இருந்து வைரபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அதே போல், மேல்பாக்கத்தை சேர்ந்த பாபு மகன் சதீஷ்,26; பைக்கில் திண்டிவனத்தில் இருந்து மேல்பாக்கம் நோக்கி சென்றார். இரு பைக்குகளும் மேல்பாக்கம் கோழிப்பண்ணை அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிம்பு, சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த மற்ற இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த சதீஷிற்கு ருத்ரம் அம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளது.
விபத்து குறித்து ரோஷனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.