ADDED : ஜூலை 16, 2024 12:19 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் த.வெ.க., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் காந்தி சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் மோகன், இளைஞரணி தலைவர் சுரேஷ், துணை தலைவர் வடிவேல், தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், நகர நிர்வாகி சுமன்.
துணை பொறுப்பாளர்கள் சீமான் (எ) குமரேசன், இளையராஜா, பொறுப்பாளர்கள் விக்கி, விஜய், கோபால், ஒன்றிய துணைச் செயலாளர் பாரதி, துணை பொறுப்பாளர்கள் சத்தியவாணி, விஜய் குரு, இளைஞரணி தலைவர்கள் பிரபு, சுரேஷ், துணை தலைவர் சிவமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.