/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெல் குவியல் மீது பைக் மோதி பிரியாணி மாஸ்டர் பலி
/
நெல் குவியல் மீது பைக் மோதி பிரியாணி மாஸ்டர் பலி
ADDED : மே 23, 2024 10:37 PM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மீது பைக் மோதியதில் வாலிபர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45; பிரியாணி மாஸ்டர். இவர் கடந்த 17ம் தேதி இரவு 7:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் - ஏனாதிமங்கலம் சாலை வழியாக பைக்கில் விழுப்புரம் சென்றார்.
ஏனாதிமங்கலம் சிவன் கோவில் அருகே சென்றபோது சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மீது பைக் மோதியது. அதில், வெங்கடேசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அதில் அவர் பலத்த காயமடைந்தார். உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் இறந்தார். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.