/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
/
பா.ஜ., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஆக 02, 2024 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பா.ஜ., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த நேமூரில் நடந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.
ஒன்றிய தலைவர் மோகன் வரவேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜா பட்ஜெட்டை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் வெங்கடகிருஷ்ணன், வினோத், சந்திரசேகர், சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் பார்த்திபன், முருகன், பொதுச் செயலாளர்கள் தங்கம், முரளி, சதாசிவம், பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். மண்டல பொதுச்செயலாளர் சத்ருகன் நன்றி கூறினார்.