/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் பா.ஜ., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
/
செஞ்சியில் பா.ஜ., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஆக 07, 2024 05:45 AM

செஞ்சி, : செஞ்சியில் பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் லோக்சபா தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்தும், மாநில செயற்குழு தீர்மானத்தை விளக்கியும், மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் சாதனையை விளக்கியும் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராதே கோகுல் வரவேற்றார்.
மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட பொது செயலாளர்கள் பாண்டியன், எத்திராஜ், மாவட்ட பொருளாளர் சத்தியநாராயணன், மாவட்ட துணை தலைவர் ஏழுமலை, ராணுவ பிரிவு மாநில செயலாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரையாற்றினார். ஐ.டி., பிரிவு கோட்ட பொறுப்பாளர் ஸ்ரீரங்கன், மண்டல தலைவர்கள் ஏழுமலை, ஜெயபிரகாஷ், அசோக்குமார், சிவா, தொழில் பிரிவு சரவணன், அரசு தொடர்பு பிரிவு சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
செஞ்சி கிழக்கு மண்டல தலைவர் தங்கராமு நன்றி கூறினார்.