/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒப்பந்ததாரர் மீது பா.ஜ., புகார்
/
ஒப்பந்ததாரர் மீது பா.ஜ., புகார்
ADDED : பிப் 22, 2025 05:08 AM

வானுார்: ஒப்பந்ததாரர், ஊராட்சி கிளர்க் ஆகியோர் மீது பி.டி.ஓ.,விடம் பா.ஜ.,வினர் புகார் தெரிவித்தனர்.
வானுார் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் திரண்டனர். பின், வானுார் பி.டி.ஓ.,வை சந்தித்து, 'ஒட்டை கிராமத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்வதில் ஒப்பந்ததாரர், ஊராட்சி கிளர்க் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் கூறினர்.
இதே நிலை நீடித்தால் பா.ஜ., சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
நிர்வாகிகள் சண்முகம், செந்தில்குமார், நாகபாசம், ஜெயப்பிரகாஷ், மாநில பொதுக்குழு ராதிகா, பெருமாள், ஜெயச்சந்திரன், ஆதிமுத்து, ராம்குமார், நீலவண்ணன், மனோகர், கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.

