ADDED : ஜூன் 27, 2026 05:50 PM

அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
செஞ்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் செஞ்சி கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கு பண்டித் தீன் தயாள் உபாத்யாய பயிற்சி முகாம் நடந்தது. முகாம் பொறுப்பாளர் ராமு தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் விநாயகம் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஏழுமலை, நிர்வாகிகள் வினோத்குமார், ராமச்சந்திரன், பாலு, சிவாஜி, அய்யப்பன், பாண்டியன், அன்பழகன், செல்வி, வழக்கறிஞர்கள் சுப்ரமணி, பாஸ்கர், தண்டபாணி, முருகன், கவுசிகன், சிவப்பிரகாசம், துரைமுருகன், சீனு, அண்ணாமலை, சிராஜ், கபூர், சதீஷ், சங்கர், செல்வம், முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
