/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : செப் 13, 2024 07:28 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் சம்பத், மாவட்ட பொருளாளர் குமாரசாமி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கம் மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் பார்த்திபன் வரவேற்றார்.
முகாமில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியும் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கியும் பேசினார்.
மண்டல தலைவர்கள் வெங்கடகிருஷ்ணன், சந்திரசேகர், மோகன், தியாகு, விவசாய அணி ஆறுமுகம், ஒன்றிய துணைத் தலைவர் வாசுதேவன் மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.