
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த விழாவிற்கு, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மணிகண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் உதயசூரியன் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.