ADDED : ஏப் 09, 2024 05:20 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கர் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் அய்யூர் அகரம், சிந்தாமணி, வடகுச்சிப்பாளையம், மேல்பாதி, எரிசனாம்பாளையம், பகண்டை, தென்னவராயன் பட்டு, மதுரப்பாக்கம், ராதாபுரம், பனையபுரம் விக்கிரவாண்டி உள்ளிட்ட கிராமங்களில் பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கர், மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் புகழேந்தி, மாநில துணைத் தலைவர் அன்புமணி, அமைப்பு செயலாளர் பழனிவேல், ஊடக பேரவை சுபாஷ் போஸ்.
ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செல்வகுமார், கோபாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு தலைவர் ராஜா, நகர செயலாளர் சங்கர், பா.ஜ., மாவட்ட தலைவர் கலிவரதன், மாநில துணைத் தலைவர் சம்பத், பொதுக்குழு உறுப்பினர் அசோக் குமார், பொதுச் செயலாளர் தங்கம்.
மண்டல தலைவர்கள் வெங்கடகிருஷ்ணன், மோகன், தொழில் நுட்ப பிரிவு இளஞ்செழியன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பல இடங்களில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

