/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
பா.ம.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 15, 2024 05:43 AM

வானுார்: வானுார் ஒன்றியத்தில் பா.ம.க, தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளிச்சப்பள்ளம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஐ.பி.பி.எல்., பிஸ்கட் தொழிற்சாலையில் உள்ள பா.ம.க., தொழிற்சங்கத்தில் இருந்து ஏராளமானோர் விலகி, செயலாளர் மகாதேவன் (எ) ஏழுமலை தலைமையில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.,சக்ரபாணி, ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ராவுத்தன்குப்பம் கவுன்சிலர் பிரகாஷ், கிருஷ்ணராஜ், மஞ்சினி, பரந்தாமன், பாஞ்சாலி, எழிலன், ஆர்.ஏழுமலை, தைலாபுரம் ஏழுமலை, முனுசாமி, ரமேஷ், ராஜூ, சசிக்குமார், தேசிங்கு, சாமிநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.