/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடையத்தில் பா.ம.க.,வினர் மறியல்
/
கடையத்தில் பா.ம.க.,வினர் மறியல்
ADDED : ஜூலை 02, 2024 04:46 AM
கண்டாச்சிபுரம்: விக்கிரவாண்டி தொகுதி, கடையம் ஊராட்சியில் பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி, கடையம், கருவாட்சி, அத்தியூர் திருக்கை, கெடார் உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் கடையம் ஊராட்சியில் பெண்களுக்கு தி.மு.க.,வினர் பணம் கொடுத்து அடைத்து வைத்துள்ளதாக பா.ம.க.,வினர் புகார் தெரிவித்தனர்.
இதற்கு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பா.ம.க.,வினர் கடயம் மைதானம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலசக்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பா.ம.க., கூட்டத்திற்கு பெண்கள் போகவிடாமல் தடுக்கும் விதமாக பணம் கொடுத்து அழைத்துச் சென்றுவிட்டதாகவும், இதற்கு துணை போகும் போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டனர். பின் கலைந்து சென்றனர்.
பா.ம.க., வினரின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மாலை 5:00 மணி முதல் 6:30 வரை பதட்டம் நிலவியது.