/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்டை நீரில் மிதந்த தாய், மகன் உடல் மீட்பு
/
குட்டை நீரில் மிதந்த தாய், மகன் உடல் மீட்பு
ADDED : ஆக 17, 2024 01:38 AM
அவலுார்பேட்டை:விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த செவலபுரை கிராமத்தில், வராக நதியோரம் உள்ள அய்யனாரப்பன் கோவிலுக்கு அருகே உள்ள குட்டையில், ஆண் மற்றும் பெண்ணின் உடல் மிதப்பதாக, வளத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேல்மலையனுார் தீயணைப்பு வீரர்கள், இரு உடல்களையும் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், இறந்தவர்கள் பெங்களூரு, எலகங்கா பகுதி சண்முகம் மனைவி தேவி, 40, அவரது மகன் ராகுல், 13, என, தெரியவந்தது.
இருவரும் கடந்த 11ல் செவலபுரையில் உள்ள பெரியாண்டவர் கோவில் விழாவிற்கு பெங்களூரிலிருந்து வந்துஉள்ளனர்.
கிராமத்தில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு செல்லாமல், தேவி, தன் மகனுடன் கோவிலுக்கு வந்துள்ளார்.
அப்போது, குட்டை நீரில் இறங்கிய போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், ஒருவரை காப்பாற்ற முயன்று மற்ற வரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

