/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜான்டூயி பள்ளியில் புத்தக வெளியீட்டு விழா
/
ஜான்டூயி பள்ளியில் புத்தக வெளியீட்டு விழா
ADDED : ஏப் 20, 2024 06:08 AM

விழுப்புரம் : விழுப்புரம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். முதல்வர் விஜயா வரவேற்றார். கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின், கல்வி நிர்வாக தலைவர் சுகன்யா முன்னிலை வகித்தனர். கிரியேட்டிவ் எழுத்தாளர் பிருந்தா, 'ஆங்கிலத்தில் புதுக் கவிதைகள் எழுதுவது எப்படி' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
விழாவில், 104 மாணவ, மாணவிகள் எழுதிய கவிதை தொகுப்பு 'ஹார்மோனி ஆப் ஹார்ட்ஸ்' தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. பின், கவிதை எழுதிய மாணவர்களுக்கு கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின் புத்தகங்களை வழங்கி பாராட்டினார்.

